சமந்தா குடும்பத்தில் நடந்த ஒரு ஜாம் ஜாம் திருமணம்.. க்யூட்டான குடும்ப புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சமந்தாவின் குடும்ப உறுப்பினருக்கு வெளிநாட்டில் ஜம் ஜாம் என திருமணம் நடந்த நிலையில், அந்த திருமணம் குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா என்பதும், சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது திரையுலகில் மீண்டும் பிஸியாகி வருகிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில், சமந்தாவின் சகோதரருக்கு வெளிநாட்டில் திருமணம் நடைபெற்றது. திருமணம் குறித்த புகைப்படங்களை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். சமந்தாவின் அண்ணன் டேவிட் பிரபு மற்றும் நிக்கோலா என்ற வெளிநாட்டு பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.
இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட சமந்தா, மணமகன், மணமகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், ரசிகர்கள் சமந்தாவின் சகோதரருக்கும், அவரது மனைவிக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout