மீண்டும் மருத்துவமனையில் சமந்தா அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

  • IndiaGlitz, [Thursday,November 24 2022]

பிரபல நடிகை சமந்தா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது தெரிந்ததே. அவருக்கு மிகவும் அரிதான மயோசிட்டிஸ் என்ற நோய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருந்தார். மேலும் தான் மெதுவாக குணமாகி வருவதாகவும் விரைவில் பூரண குணமாகி விடும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று திடீரென மீண்டும் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமந்தா அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவர் மயோசிட்டிஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறாரா? அல்லது வேறு ஏதும் பிரச்சனையா? என்ற விவரம் தெரியவில்லை.

சமந்தாவின் உடல்நிலை சற்று மோசமாக இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவினாலும், சமந்தாவின் தரப்பிலிருந்தோ அல்லது மருத்துவமனை தரப்பில் இருந்தோ இன்னும் அவரது உடல்நிலை குறித்த விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சமந்தா விரைவில் குணமாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான சமந்தாவின் ’யசோதா’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் இரண்டாவது வாரமாக அரங்கு நிறைந்த காட்சிகளாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திருமணத்தில் கலந்து கொள்ள இவர்களுக்கு மட்டும் தான் அனுமதி: கெளதம் கார்த்திக்

நடிகர் கௌதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் வரும் 28ஆம் தேதி சென்னை அருகே உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நடைபெற இருப்பதாகவும்

'பத்து தல' படத்தின் முக்கிய அப்டேட் தந்த சிம்பு.. ரசிகர்கள் உற்சாகம்!

 சிம்பு நடித்துவரும் அடுத்த திரைப்படமான 'பத்து தல' படத்தின் முக்கிய அப்டேட்டை அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

ராபர்ட் மாஸ்டரின் சகோதரி ஒரு ஐட்டம் டான்ஸரா?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டரின் சகோதரி ஒரு ஐட்டம் டான்ஸர் என தெரியவந்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அசீம்-குயின்ஸி காரசாரமான மோதல்.. விக்ரமன்- ஜனனி பிரச்சனையா?

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 46 வது நாளாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி சூடுபிடித்து உள்ளது என்பதும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்று வரும் நீதிமன்றம் டாஸ்க் நிகழ்ச்சியின்

உலக நாயகன் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள், தொண்டர்கள் அதிர்ச்சி!

உலக நாயகன் கமல்ஹாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.