காதலருடன் கூட்டணி வைத்து யோகா செய்யும் பாலிவுட் நடிகை! வைரல் புகைப்படம்!
- IndiaGlitz, [Monday,March 15 2021]
பாலிவுட் சினிமாவில் நடிகையாக இருப்பதோடு பிரபல மாடலாகவும் அறியப்படுபவர் நடிகை சாக்ஷி மாலிக். இவருக்கு சினிமா ரசிகர்களைவிட இன்ஸ்டாகிராம் ரசிகர்கள் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில் “பாம் டிக்கி பாம் டிக்கி“ பாடல் மூலம் பிரபலமான இவரை இன்ஸ்டாவில் கிட்டத்தட்ட 6 மில்லியன் ஃபாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
மேலும் இவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் பல லட்சக்கணக்கான லைக்குகளை பெற்று வேற லெவல் வைரலை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த காதலர் தினத்திற்கு இவர் பதிவிட்ட இன்ஸ்டா புகைப்படம் இணையதளத்தில் தாறுமாறு வைரலாகியது. காரணம் நடிகை சாக்ஷி மாலிக் தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபரான சந்துல் கடாரா என்பவரை காதலித்து வருகிறார். அவருடன் இணைந்து முத்தம் கொடுப்பது போல ஒரு யோகாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
அவர் தற்போது தன்னுடைய காதலரான சந்துலுடன் இணைந்து வேறு ஒரு யோகாவை செய்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அதாவது சந்துல் யோகா செய்வதுபோல தரையில் படுத்து கையையும் காலையும் தூக்குகிறார். அவரது கை மற்றும் கால்களின் மீது நடிகை சாக்ஷி அமர்ந்து கொண்டே யோகா செய்கிறார்.
மேலும் ஒருவர் தனியாக இப்படி செய்து மிகவும் கடினம். கூட்டாக செய்யும்போது எளிதானது என்றும் தன்னுடைய கேப்ஷனில் பதிவிட்டு இருக்கிறார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வேற லெவல் வைரலாகி வருகிறது.