மன அமைதிக்காக மாலத்தீவு பறந்த பாலிவுட் நடிகை… ரசிகர்களுக்கும் அட்வைஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் நடிகை மற்றும் பாலிவுட் உலகில் முன்னணி மாடலிங் அழகியாக வலம் வருபவர் நடிகை சாக்ஷி மாலிக். இவர் “பாம் டிக்கி பாம் டிக்கி” பாடல் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானார். தற்போது இசை ஆல்பம் மற்றும் சினிமாக்களில் கவனம் செலுத்தி வரும் இவர் தொடர்ந்து சமூக வலைத்தளத்திலும் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில் இன்ஸ்டாவில் இவரை ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை மட்டும் 6 மில்லியனை கடந்து இருக்கிறது. மேலும் இன்ஸ்டாவில் தொடர்ந்து இவர் பிகினி புகைப்படங்களையும் வொர்க் அவுட் புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இதனால் அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லட்சக்கணக்கான லைக்ஸ்குள் குவிந்து வருகின்றன. இதனால் நெட்டிசன்களிடம் அதிக வரவேற்பு பெற்ற சாக்ஷி மாலிக் தற்போது கொரோனா குறித்து உருக்கமான ஒரு பதிவினை தன் இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
அதில் “கொரோனா பரிசோதனைக்குப் பிறகு ஓய்வுக்கான இடைவெளி தேவைப்படுகிறது. கொரோனா பரவலுக்கு நடுவே நாட்டில் என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு அதிர்ச்சி அடைவதற்கு பதிலாக பாதுகாப்பு சூழலை உருவாக்குவது முக்கியம். இதில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். தோழர்களே பாதுகாப்பாக இருங்கள். இதைவிடவும் உங்கள் மன அமைதிக்கு முன்னுரிமை கொடுங்கள்” எனக் கூறியுள்ளார்.
மேலும் நடிகை சாக்ஷி மாலிக் மன அமைதிக்காக மாலத்தீவு பறந்த விஷயத்தையும் அந்தப் பதிவில் குறிப்பிட்டு உள்ளார். சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் பலரும் மாலத்தீவுக்கு படையெடுத்து வருகின்றனர். நடிகை காஜல் அகர்வால் தொடங்கி வைத்த இந்த படையெடுப்பு பயணத்தில் தற்போது நடிகை சாக்ஷி மாலிக்கும் இணைந்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments