சாக்ஷிமா இதுகெல்லாமா வருத்தப்படுவீங்க… கமெண்டுகளோடு வைரலாகும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானர் நடிகை சாக்ஷி அகர்வால். இந்நிகழ்ச்சிக்கு முன்பு ரஞ்சித் இயக்கத்தில் 2018 இல் உருவான “காலா” படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு மருமகளாக குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதேபோல மலையாளத்திலும் கடந்த 2018 இல் “ஓராயிரம் கினாக்களால்” எனும் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
ஆடுத்து 2019 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் உருவான “விஸ்வாசம்” திரைப்படத்தில் மருத்துவர் வேடத்தில் நடித்து இருந்தார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் நடிகை சாக்ஷி அகர்வால் சமீபத்தில் வெளியான “டெடி” படத்தில் நடித்து இருந்தார்.
இந்தப் படத்தைத் தவிர தற்போது “சிண்ட்ரெல்லா”, “ஆயிரம் ஜென்மங்கள்“, “அரண்மனை 3“, “ஆத்யன்“ போன்ற திரைப்படங்களில் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார். இதைத்தவிர சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சாக்ஷி தொடர்ந்து தனது போட்டோ ஷுட் புகைப்படங்களை பதிவிட்டு தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை குவித்து வைக்கிறார்.
அந்த வகையில் தற்போது நான் ஒரு குற்றவாளியாக உணர்கிறேன். காரணம் எனது முதுகு பக்கத்திற்கான வொர்க் அவுட்டை நான் மறந்தே போய்விடுகிறேன் எனக் கூறிப்பிட்டு தனது முதுகுப்புறத்தை காட்டி கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எப்போதும் போல பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் “உங்கள் இடுப்பு அழகாக இருக்கிறது“ என்றும் “இதுக்கெல்லாமா வருத்தப்படுவீங்க சாக்ஷி“ என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout