மேக்கப் இல்லாமல் இவ்வளவு அழகா? சாய்பல்லவியின் காஷ்மீர் போட்டோ ஷூட் வைரல்..!

  • IndiaGlitz, [Friday,July 14 2023]

நடிகை சாய் பல்லவி தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் படப்பிடிப்பு நேரம் போக மீதம் உள்ள நேரத்தில் காஷ்மீரின் கொள்ளை அழகை புகைப்படமாக எடுத்து பதிவு செய்து வருகிறார்.

ஏற்கனவே காஷ்மீரில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை அவர் பதிவு செய்த நிலையில் அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் காஷ்மீரில் புதிய போட்டோஷூட் புகைப்படத்தை எடுத்து பதிவு செய்துள்ளார்.

மேக்கப் இல்லாமல் இயற்கையான அழகுடன் தோன்றும் சாய் பல்லவியின் இந்த போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு 15 லட்சத்துக்கும் அதிகமான லைக் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சாய் பல்லவி தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்றுள்ளார் என்பதும் விரைவில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.