close
Choose your channels

எனக்கும் யோகிபாபுவுக்கும் திருமணமா? நடிகை விளக்கம்

Tuesday, November 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு அவர்களுக்கு திருமணம் நடந்து விட்டதாக நேற்று சமூக வலைதளங்களில் வதந்திகள் கிளம்பியதும் இந்த வதந்திக்கு யோகிபாபு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் மறுப்பு தெரிவித்தும் தெரிந்ததே. இந்த நிலையில் யோகிபாபு திருமண வதந்தி புகைப்படத்தில் இருக்கும் நடிகை சபிதாராய் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த வதந்தி குறித்து என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. இரண்டு நாட்களாக என்னுடைய பெயரும் காமெடி நடிகர் யோகிபாபு அவர்களின் பெரும் டிரெண்டிங்காக இருக்கின்றது. இந்த வதந்தியை நினைத்து சிரிப்பதா அழுவதா அல்லது கோபப்படுவதா? என்று தெரியவில்லை. யோகி பாபு அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்ததற்கு நன்றி, என்னுடைய தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.

கடந்த 2017ஆம் ஆண்டு ‘கன்னிராசி’ என்ற படத்தில் நானும் அவரும் இணைந்து நடிக்கும்போது நான் எடுத்துக்கொண்ட செல்பி தான் தற்போது திருமண புகைப்படமாக வைரலாகி வருகிறது. ஒரு காமெடி நடிகராக அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் அவருடன் நடிக்கும்போது நானே விரும்பி எடுத்த செல்பி தான் அந்த புகைப்படம். இந்த புகைப்படம் எப்படி லீக் ஆகியது என்று எனக்கு தெரியவில்லை.

கன்னிராசி படத்தை தொடர்ந்து அவருடன் நான் மூன்று படங்கள் நடித்துக் கொண்டிருக்கின்றேன். இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளது. எங்களுக்குள் நடிகர் நடிகை என்ற என்பதை தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை. அவர் நல்ல மனிதர், எனக்கு நல்ல நண்பர் அவ்வளவுதான். இவ்வாறு நடிகை சபிதாராய் விளக்கம் அளித்துள்ளார். இந்த விளக்கத்தை அடுத்து யோகிபாபு திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாகவே கருதப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment