தளபதி விஜய்க்காக செஞ்சுரி அடித்த நடிகை ரோஜாவின் மகன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி திரையுலகிலேயே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்பதும் திரையுலக பிரபலங்களின் வாரிசுகளும் பலர் விஜய் ரசிகர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நட்சத்திர தம்பதிகளான ஆர்கே செல்வமணி மற்றும் ரோஜா தம்பதியின் மகன் கௌசிக் விஜய்யின் தீவிர ரசிகராம். ஒவ்வொரு முறையும் விஜய் படத்தின் டீசர், டிரைலர் ரிலீஸ் ஆகும்போது தனது மகன் கெளசிக் ஆயிரக்கணக்கான முறை பார்ப்பதாக சமீபத்தில் கலந்துகொண்ட ரியாலிட்டி ஷோவில் ரோஜா தெரிவித்துள்ளார்.
விஜய் படங்களின் டிரைலர்களை அதிகமுறை பார்க்க வேண்டும் என்பதற்காகவே நூறு ஜிமெயில் கணக்குகளை கெளசிக் தொடங்கி வைத்துள்ளதாகவும், அந்த கணக்குகள் மூலம் டிரைலரை பார்த்து லைக், கமெண்ட்ஸ் செய்து வருவதாகவும் நடிகை ரோஜா தெரிவித்துள்ளார். விஜய்யின் தீவிர ரசிகர் என்பதற்காக ஜிமெயில் தொடங்குவதில் செஞ்சுரி அடித்த ரோஜாவின் மகன் குறித்த தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் நடித்த ‘நெஞ்சினிலே’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை ரோஜா, விஜய்யுடன் நடனம் ஆடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com