தாய்மொழியுடன் இந்தி, ஆங்கிலம் கட்டாயம் தேவை: அமைச்சர் ரோஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
தாய்மொழியுடன் இந்தி, ஆங்கிலம் கட்டாயம் தேவை என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்தியை திணிக்க கூடாது என்றும் ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில இளைஞர் நலத் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக சமீபத்தில் பதவியேற்ற நடிகை ரோஜா தமிழகத்தில் உள்ள கோயில் குளங்களுக்கு சுற்றுலா செய்து வருகிறார். நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் வழிபட்ட அமைச்சர் ரோஜா அதன்பின் திருவண்ணாமலையில் அருணாச்சல ஈஸ்வரரை தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘தெலுங்கு தேசம் கட்சியில் எனக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருந்தது. சொந்த கட்சியினரே என்னை தோற்கடித்தனர். ஆனால் நான் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்த பிறகு தான் தற்போது தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன்.
என்னை ஒரு சகோதரியாக ஏற்று எனக்கு அமைச்சர் பதவியை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்கியுள்ளார். நான் அமைச்சரானதில் ஆந்திர மக்கள் எவ்வளவு சந்தோஷப் படுவார்களோ, அதேபோல் தமிழக மக்களும் சந்தோஷப்படுவார்கள். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிகவும் அருமையாக உள்ளது. இரு மாநில எல்லையில் உள்ள மக்களுக்கு இருமாநில முதல்வர்கள் உதவி செய்து வருகிறார்கள் என்று அமைச்சர் ரோஜா கூறினார்.
அதன் பிறகு இந்தி குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரோஜா, ‘தாய் மொழியுடன் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மொழிகள் கட்டாயம் தேவை என்றும் அனைத்து மொழிகளையும் பயின்றால் தான் நல்ல முறையில் முன்னேற்றம் அடைய முடியும் என்றும் கூறினார். மேலும் மத்திய அமைச்சர்கள் பலருக்கு ஹிந்தி மட்டுமே தெரியும் என்பதால் நமது மாநிலத்திற்கு என்ன வேண்டும் என்பதை கேட்டு பெறுவதற்கு இந்தி கட்டாயம் தேவை என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்தியை மக்களிடம் திணிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com