கபடி வீரர்களுடன் கபடி விளையாடிய நடிகை ரோஜா: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,March 09 2021]

பிரபல நடிகை ரோஜா, கபடி விளையாட்டு வீரர்களுடன் கபடி விளையாட வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது

நடிகை ரோஜா தனது தொகுதியான நகரியில் நடைபெற்ற கபடி போட்டி ஒன்றை இன்று தொடங்கி வைத்தார். போட்டி தொடங்கப்பட்டதும் களத்தில் இறங்கி கபடி ஆடிய இளைஞர்களை பார்த்து உற்சாகமடைந்த ரோஜா, திடீரென யாரும் எதிர்பாராத வகையில் தானும் கபடி விளையாட களத்தில் இறங்கினார்.

இரு குழுக்கள் விளையாடிய நிலையில் அதில் ஒரு குழுவின் சார்பில் விளையாடிய ரோஜா, கபடி களத்தில் எதிரணியின் இடத்திற்கு சென்று இளைஞர்களுக்கு இணையாக ரைட் செய்து அசத்தினார். அவர் கபடி ரைட் செய்யும் விதத்தை பார்த்த அங்கு கூடியிருந்தவர்கள் கைத்தட்டியும், விசிலடித்தும் ஆரவாரம் எழுப்பினர்.

போட்டி முடிந்தது வீரர்களிடையே பேசிய ரோஜா, ’எனக்கு பள்ளிப்பருவத்தில் இருந்தே கபடி விளையாடுவது என்றால் மிகுந்த ஆர்வம். கபடி போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதன் மூலம் மனமும், உடலும் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்’ என்று கூறினார். ரோஜா கபடி விளையாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது