கபடி வீரர்களுடன் கபடி விளையாடிய நடிகை ரோஜா: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,March 09 2021]

பிரபல நடிகை ரோஜா, கபடி விளையாட்டு வீரர்களுடன் கபடி விளையாட வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது

நடிகை ரோஜா தனது தொகுதியான நகரியில் நடைபெற்ற கபடி போட்டி ஒன்றை இன்று தொடங்கி வைத்தார். போட்டி தொடங்கப்பட்டதும் களத்தில் இறங்கி கபடி ஆடிய இளைஞர்களை பார்த்து உற்சாகமடைந்த ரோஜா, திடீரென யாரும் எதிர்பாராத வகையில் தானும் கபடி விளையாட களத்தில் இறங்கினார்.

இரு குழுக்கள் விளையாடிய நிலையில் அதில் ஒரு குழுவின் சார்பில் விளையாடிய ரோஜா, கபடி களத்தில் எதிரணியின் இடத்திற்கு சென்று இளைஞர்களுக்கு இணையாக ரைட் செய்து அசத்தினார். அவர் கபடி ரைட் செய்யும் விதத்தை பார்த்த அங்கு கூடியிருந்தவர்கள் கைத்தட்டியும், விசிலடித்தும் ஆரவாரம் எழுப்பினர்.

போட்டி முடிந்தது வீரர்களிடையே பேசிய ரோஜா, ’எனக்கு பள்ளிப்பருவத்தில் இருந்தே கபடி விளையாடுவது என்றால் மிகுந்த ஆர்வம். கபடி போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதன் மூலம் மனமும், உடலும் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்’ என்று கூறினார். ரோஜா கபடி விளையாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது
 

More News

விவாகரத்து முடிவெடுத்த 'பேட்ட' நடிகரை மனைவியுடன் சேர்த்து வைத்த கொரோனா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் தனது மனைவியை விவாகரத்து செய்ய இருந்த நிலையில் கொரோனா வைரஸ் அவர்களை மீண்டும் இணைத்து வைத்துள்ள

பிரபல கவர்ச்சி நடிகையின் பயோபிக் படத்திற்கு மிரட்டல்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் தெலுங்கு திரை உலகை பரபரப்பை ஏற்படுத்தியவர் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி என்பதும் இவர் பிரபல இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது கூறிய பாலியல்

அம்மா வழியில் பெண்களுக்கு நலத்திட்டம்… முதல்வர் வாக்குறுதி!

நேற்று (மார்ச் 8) மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்துப் பெண்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கர்ப்பிணி தோழியுடன் நடனமாடிய சுனிதா: வைரலாகும் பழைய வீடியோ!

'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் ஒவ்வொரு சனி ஞாயிறும் இந்த நிகழ்ச்சிக்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து

பெண்களின் மேம்பாட்டுக்காக 6 கேஸ் சிலிண்டர், ரூ.1,500- முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி!

வரும் சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் தற்போது அதிமுக இறுதிக்கட்டத்தை எட்டி வருவதாகக் கூறப்படுகிறது.