close
Choose your channels

தமிழக அரசியலுக்கு வருகிறாரா நடிகை ரோஜா? விஜய் கட்சியில் இணைய பேச்சுவார்த்தையா?

Monday, August 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த பல ஆண்டுகளாக நடிகை ரோஜா ஆந்திர அரசியலில் இருக்கும் நிலையில் அவர் தமிழக அரசியலுக்கு வரப்போவதாகவும் குறிப்பாக விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைய போவதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வதந்திகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த நடிகை ரோஜா ’நான் விஜய் கட்சியில் சேர போவதாக கூறப்படும் வதந்தியை தெலுங்கு தேசம் கட்சி தான் பரப்பி வருகிறது. விஜய் கட்சியில் நான் ஏன் இணைய வேண்டும்? விஜய் எனக்கு அவ்வளவு நெருக்கம் கிடையாது’ என்றும் தெரிவித்தார்

மேலும் ‘ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி கட்சி ஆரம்பிக்கும் போதே நான் அவருடைய கட்சியில் சேரவில்லை, அதனால் விஜய் கட்சியில் நான் சேர மாட்டேன், எப்போதும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பேன், வேறு எந்த கட்சியிலும் சேரும் ஐடியா எனக்கு இல்லை’ என்று தெரிவித்தார்

இதனை அடுத்து தமிழக அரசியலுக்கு நடிகை ரோஜா வரப்போகிறார் என்பதும் விஜய் கட்சியில் சேரப் போகிறார் என்பதும் முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ‘நெஞ்சினிலே’ என்ற திரைப்படத்தில் நடிகை ரோஜா ஒரு பாடலுக்கு விஜய்யுடன் நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment