அமைச்சரும் இல்லை, துணை முதல்வரும் இல்லை: ரோஜாவுக்கு என்ன பதவி?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடைபெற்று முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி ஆட்சியை பிடித்தது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில் ஆந்திராவில் ஐந்து துணை முதல்வர்களும், 20 அமைச்சர்களும் இன்று பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. எனவே நகரி தொகுதியில் வெற்றி பெற்ற நடிகை ரோஜா, அமைச்சர் அல்லது துணை முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்பட்டது. ஆனால் 25 பேர் கொண்ட அமைச்சர்கள், துணை முதல்வர்கள் பட்டியலில் ரோஜாவின் பெயர் இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆந்திர சட்டமன்றத்தின் சபாநாயகராக நடிகை ரோஜா பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக சற்றுமுன் வெளியான தகவல் தெரிவிக்கின்றது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால், நடிகை ஒருவர் சபாநாயகர் பதவியேற்பது இந்திய அரசியலில் ஒரு புதுமையான நிகழ்வாக கருதப்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments