அமைச்சரும் இல்லை, துணை முதல்வரும் இல்லை: ரோஜாவுக்கு என்ன பதவி?

நடைபெற்று முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி ஆட்சியை பிடித்தது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றுள்ளார்.

இந்த நிலையில் ஆந்திராவில் ஐந்து துணை முதல்வர்களும், 20 அமைச்சர்களும் இன்று பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. எனவே நகரி தொகுதியில் வெற்றி பெற்ற நடிகை ரோஜா, அமைச்சர் அல்லது துணை முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்பட்டது. ஆனால் 25 பேர் கொண்ட அமைச்சர்கள், துணை முதல்வர்கள் பட்டியலில் ரோஜாவின் பெயர் இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆந்திர சட்டமன்றத்தின் சபாநாயகராக நடிகை ரோஜா பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக சற்றுமுன் வெளியான தகவல் தெரிவிக்கின்றது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால், நடிகை ஒருவர் சபாநாயகர் பதவியேற்பது இந்திய அரசியலில் ஒரு புதுமையான நிகழ்வாக கருதப்படும்.

More News

ரஜினியை பாஜக நம்பக்கூடாது: சுப்பிரமணியன் சுவாமி!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய சுப்பிரமணியன் சுவாமி அவ்வப்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரையும் கடுமையாக விமர்சனம் செய்து வருபவர்களில் ஒருவர்.

சீனாவை அடுத்து ரஷ்யாவிலும் '2.0': ரிலீஸ் தேதியுடன் கூடிய டிரைலர் வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவான

சீனாவில் தொடங்கிய '2.0' புரமோஷன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வசூலை பெற்றது. இந்த நிலையில் இந்த படம் ஜூலை 12ஆம் தேதி சீனாவில் ரிலீஸ் ஆகிறது.

சிம்புவின் 'மாநாடு' தொடங்கும் தேதி குறித்த தகவல்

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'மாநாடு' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அடுத்து படப்பிடிப்பை ஆரம்பிக்க படக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

'8 தோட்டாக்கள்' தயாரிப்பாளரின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்!

கோலிவுட் திரையுலகின் இளம் இயக்குனர்களில் ஒருவர் '8 தோட்டாக்கள்' இயக்குனர் ஸ்ரீகணேஷ். பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் உதவி இயக்குனராக