இனிமேல் நல்ல காலம்தான்: தேர்தலில் வெற்றி பெற்ற பிரபல நடிகை பேட்டி!

  • IndiaGlitz, [Saturday,May 25 2019]

மக்களவை தேர்தலுடன் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்ற நிலையில் இந்த மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. விரைவில் ஜெகன்மோகன் ரெட்டி அம்மாநில முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

இந்த நிலையில் நகரி தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியுள்ள பிரபல நடிகை ரோஜா, இம்முறை ஆந்திராவின் அமைச்சராகவும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் வெற்றிக்கு பின்னர் காளிபாக்கம் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடவுளின் ஆசி, கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவால் இரண்டாவது முறையாக நான் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இனி நல்ல காலம் பிறந்து விட்டது. ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் நல்லாட்சியை மீண்டும் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி கொண்டு வருவார்' என்று கூறினார்.
 

More News

டவுட்டே வேணாம், உங்களை பழிவாங்கத்தான் போறேன்: 'கென்னடி கிளப்' டீசர் விமர்சனம்

'கனா' திரைப்படத்தின் வெற்றி, விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படங்களை குறிப்பாக பெண்கள் விளையாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படங்களை இயக்க பலர் முன்வந்துள்ளனர்.

ஜெயிச்ச மறுநாளே விவசாயக்கடன் தள்ளுபடியா? கன்னியாகுமரி எம்பி அதிர்ச்சி

நடைபெற்று முடிந்த 17வது மக்களவை தேர்தலில் தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சரும், பாஜகவின் முக்கிய தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனை வீழ்த்தியவர் எச்.வசந்தகுமார்.

சூர்யாவின் என்.ஜி.கே: தமிழ் சினிமாவில் செய்த முதல் சாதனை

100 வருட தமிழ் சினிமாவில் வரும் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகும் சூர்யாவின் 'என்.ஜி.கே' திரைப்படம் ஒரு புதிய சாதனையை செய்துள்ளது. 

ஓ இதுதான் தமிழ் மண்ணா? பாஜக வெறுப்பாளர்களை வெறுப்பேற்றிய எஸ்.வி.சேகர்

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், கேரளம் தவிர இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி வாகை சூடியுள்ளது.

இனிமேலும் நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பார்களா?

திரையுலகில் சூப்பர் ஸ்டார்களாக இருந்தாலும் அரசியலில் பல நடிகர்கள் ஜீரோவாகி போனதால் இனிமேலும் நடிகர்களுக்கு முதல்வர் ஆசை வராது என்றே கணிக்கப்படுகிறது.