அமைச்சரானவுடன் நடிகை ரோஜாவின் அதிரடி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,April 13 2022]

ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக நேற்று முன்தினம் நடிகை ரோஜா பதவியேற்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவருக்கு நடிகைகள் குஷ்பு, ராதிகா உள்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்தநிலையில் அமைச்சராக பதவியேற்ற உடன் செய்தியாளர்களை சந்தித்த ரோஜா, ‘இனிமேல் சினிமா மற்றும் டிவி சீரியலில் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறியபோது, ‘திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு வர ஜெயலலிதா, என்.டி.ராமராவ் ஆகியோர் உத்வேகமாக இருந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்கிய வாய்ப்பு காரணமாக நகரி தொகுதியில் இருமுறை வெற்றி பெற்றதாகவும் சட்டமன்றத்துக்கு நுழையும் வாய்ப்பை கொடுத்ததற்கு தனது நன்றி என்றும் கூறியுள்ளார் .

மேலும் எம்எல்ஏவாக இருந்த போது ஒரு சில திரைப்படங்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் நடித்ததாகவும் இதை பலர் விமர்சனம் செய்ததாகவும் கூறிய அமைச்சர் ரோஜா தற்போது அமைச்சர் ஆகிவிட்டதால் பொறுப்புகள் அதிகரித்து உள்ளன என்றும் எனவே இனி திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.