ஒரே நேரத்தில் 3000: நடிகை ரோஜாவின் கின்னஸ் சாதனை!

  • IndiaGlitz, [Sunday,July 31 2022]

நடிகை ரோஜாவை ஒரே நேரத்தில் 3000 போட்டோகிராபர்கள் போட்டோ எடுத்ததை அடுத்து உலகிலேயே இதுதான் முதல் முறை என்பதால் அவருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

உலகிலேயே ஒரு அமைச்சரை ஒரே நேரத்தில் 3000 போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்கும் நிகழ்வு நேற்று தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்காக 3000 போட்டோகிராபர்கள் தயாராக இருந்தபோது ரோஜா மேடை ஏறியதும் அனைவரும் ஒரே நேரத்தில் போட்டோ எடுத்தனர். உலகிலேயே ஒரு அமைச்சரை ஒரே நேரத்தில் 3000 போட்டோகிராபர்கள் போட்டோ எடுப்பது இது தான் முதல் முறை என்பதால் இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

’ஒன் கிளிக் ஆன் சேம் டைம்’ என்ற இந்த சாதனைக்கான சான்றிதழை நடிகையும் ஆந்திர மாநில விளையாட்டு துறை அமைச்சருமான ரோஜாவிடம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.