திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா… சுவாமி தரிசனத்திற்கு பிறகான புகைப்படம்!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
90களில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தற்போது ஆந்திரா அரசியலில் முக்கிய நபராகவும் இருந்துவரும் ரோஜா அறுபடை கோவிலில் ஒன்றான திருத்தணியில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
முகனின் அறுபடை கோவில்களுள் ஒன்றான திருத்தணி முருகன் கோவில் வடத்தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு இன்று வருகை தந்த நடிகை ரோஜா அங்கு சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களுடன் பேசினார். உக்ரைன் நாட்டில் பயின்றுவந்த 250 ஆந்திர மாணவர்கள் அங்கிருந்த மீட்கப்பட்டு உள்ளதாகவும் மேலும் அங்குள்ள மாணவர்கள், தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆந்திரா மநிலம் நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் நடிகை ரோஜா தொடர்ந்து பழமையான கோவில்களில் அடிக்கடி சுவாமி தரிசனம் செய்துவருகிறார். அந்த வகையில் தற்போது திருத்தணி முருகன் கோவிலில் அவர் சுவாமி தரிசனம் செய்த பிறகு எடுத்துக்கொண்ட புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://jscss.indiaglitz.com/anomusercomment.jpg)