4 ரூபாய்க்கு சாப்பாடு: பிரபல நடிகை தொடங்கிய ஓட்டல்
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா உணவகத்தில் ரூ.1க்கு இட்லி, 2 சப்பாத்தி 3 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய், சாம்பார் சாதம் - புதினா சாதம் போன்றவை 5 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசின் அம்மா உணவகத்தை விட குறைவாக அதாவது ரூ.4க்கு முழு சாப்பாடு தரும் உணவகம் ஒன்றை நடிகை ஒருவர் தனது சொந்த செலவில் திறந்துள்ளார். அவர்தான் கடந்த 2000ஆம் ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகை ரோஜா.
நடிகை ரோஜா தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகரி தொகுதி எம்.எல்.ஏஆக உள்ளார். தனது தொகுதியில் உள்ள ஏழை எளிய மக்களின் பசியை தீர்க்க நடிகை ரோஜா கடந்த 17ஆம் தேதி தனது பிறந்த நாள் அன்று மலிவு விலை உணவகத்தை திறந்துள்ளார். இந்த உணவகத்தில் முழு சாப்பாடு விலை ரூ.4 மட்டுமே.
ஆந்திராவில் உள்ள அண்ணா கேண்டின், கர்நாடகாவில் உள்ள இந்திரா கேண்டின், தமிழகத்தில் உள்ள அம்மா உணவகம் ஆகியவற்றைவிட ரோஜாவின் உணவகத்தில் சாப்பாட்டின் விலை குறைவாக உள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. வரும் 2019ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் ரோஜாவின் இந்த உணவகம், அவருக்கு அதிகப்படியான வாக்குகளை பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com