கிஷோர் கே சாமி மீது புகார் அளித்த தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Thursday,June 17 2021]

கிஷோர் கே சாமியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று ஒரு வழக்கில் கைது செய்தனர் என்பதும், இதனையடுத்து அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பெண் பத்திரிகையாளர் ஒருவரை அவதூறாக பேசிய வழக்கில் அவர் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கிஷோர் கே சாமி மீது நடிகை ரோகினி ஆன்லைன் மூலமாக புகார் அளித்திருக்கிறார். நடிகை ரோகினி மற்றும் அவரது கணவர் மறைந்த நடிகர் ரகுவரன் குறித்து ஃபேஸ்புக்கில் கிஷோர் கே சாமி இழிவாகவும் ஆபாசமாகவும் ஒரு பதிவு செய்திருப்பதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை ரோகினி ஆன்லைன் மூலமாக காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார். அந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும், அநேகமாக இந்த வழக்கிலும் காவல்துறையினர் கிஷோர் கே சாமி மீது வழக்குப் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது

அது மட்டுமின்றி கிஷோர் கே சாமி மீதான பல்வேறு புகார்கள் பல்வேறு காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட நிலையில் அனைத்து புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது