தமிழ் நடிகைகள் குறித்து இழிவான பேச்சு.. டாக்டர் காந்தாராஜ் மீது ரோகிணி புகார்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் நடிகைகள் குறித்து இழிவாக பேசிய டாக்டர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ரோகிணி புகார் ஒன்றை அளித்துள்ளார். குறிப்பாக நடிகர் சங்கத்தின் சார்பில் விசாகா கமிட்டியின் தலைவராக உள்ள நடிகை ரோகிணி சார்பாக இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரில் செப்டம்பர் 7ஆம் தேதி தனியார் youtube சேனல் ஒன்றில் தமிழ் சினிமா நடிகைகளை பற்றி அவதூறாகவும் மோசமாகவும் டாக்டர் காந்தாராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். அந்த பேச்சில் அவர் நடிகைகளை ஒட்டுமொத்தமாக கீழ்த்தரமாக பேசிய நிலையில் அனைத்து நடிகைகளும் பாலியல் தொழிலாளி என்பது போல பேசியது கண்டிக்கத்தக்கது.
சினிமா துறையை சார்ந்த அனைத்து நடிகைகளையும் தவறாக நினைக்கும் வகையில் இந்த பேட்டி உள்ளது என்றும் மறைந்த நடிகைகள் முதல் தற்போதுள்ள நடிகைகள் வரை அவர்களது வாழ்க்கை நடந்தது என தனக்கு சம்பந்தம் இல்லாத, எவ்வித ஆதாரம் இல்லாமல் பேட்டி அளித்து உள்ளார்.
இந்த பேட்டியின் மூலமாக நடிகைகள் என்றாலே சினிமாவில் கேமரா மேன், எடிட்டர், மேக்கப் மேன், டைரக்டர் என அனைவரிடமும் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் தான் நடித்து வருகின்றார்கள் என்பது போல டாக்டர் காந்தாராஜ் பேசியது வேதனை அளிப்பதாகவும் மேடை நாகரிகம் மற்றும் சமூகப் பொறுப்பு இல்லாமல் தனது தோன்றியவற்றை எல்லாம் பேசி அதில் அலங்காரத்திற்காக நாக்கு கூசும் வசனங்களையும் அவர் பேசியது கண்டிக்கத்தக்கது.
இது தொடர்பாக அவர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலில் உள்ள அந்த பேட்டியை நீக்க வேண்டும் என்றும் நடிகை ரோகிணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com