போட்டோஷூட் எடுக்கும்போது குளத்தில் தவறி விழுந்த தமிழ் நடிகை: வீடியோ வைரல்

  • IndiaGlitz, [Tuesday,July 20 2021]

குளத்தின் அருகே போட்டோஷூட் எடுக்கும் போது குளத்தில் தவறி விழுந்த தமிழ் நடிகை ஒருவரின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

கிட்டத்தட்ட அனைத்து நடிகைகளும் போட்டோஷூட் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் நடிகை ரித்திகா சிங் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரு கோவிலின் குளத்தின் அருகே உட்கார்ந்தவாறு போஸ் கொடுத்து ரித்திகா சிங்கை போட்டோஷூட் குழுவினர் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ரித்திகா சிங் குளத்தில் தவறி விழுந்தார். இதனை அடுத்து போட்டோஷூட் குழுவினர் அவரை குளத்தில் இருந்து வெளியே கொண்டு வர உதவி செய்தனர். அதன் பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக போட்டோஷூட் திட்டத்தை மாற்றி ஈரமான உடைகளுடன் போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்தனர்

இது குறித்த வீடியோவை நடிகை ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. எங்களுக்கு முதலில் ஈரமான உடையுடன் போட்டோஷூட் எடுக்கும் திட்டம் இல்லை என்றும் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஈரமான உடைகளுடன் போட்டோ ஷூட் எடுத்தோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை ரித்திகா சிங், சுதா கொங்கரா இயக்கிய ’இறுதிச்சுற்று’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் ’ஆண்டவன் கட்டளை’ ’சிவலிங்கா’ ’ஓ மை கடவுளே’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ’பாக்ஸர்’ ’பிச்சைக்காரன் 2’ மற்றும் ’வணங்காமுடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காஃபி பிரியரா நீங்கள்… கொரோனா நேரத்தில் மகிழ்ச்சி தரும் அட்டகாசமான தகவல்!

காஃபி பிடிக்காத மனிதரே இருக்க முடியாது. அந்த அளவிற்கு உற்சாகம் கொடுக்கும் ஒரு பானமாக

' சந்திரமுகி 2' படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லையா? இயக்குனர் பி.வாசு விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஜோதிகா, பிரபு உள்பட பலர் நடித்த 'சந்திரமுகி' திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

நடிகை குஷ்புவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதா?

நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் டுவிட்டர் பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

18 வயதில் அஜித்துடன் நடித்த நடிகையின் 42வது பிறந்த நாள்: வைரல் புகைப்படங்கள்!

18 வயதில் அஜித் நடித்த திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் நேற்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில்

புதிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் "குரங்கு-பி" வைரஸ்…. அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்துபோய் இருக்கிறது. இந்நிலையில் சீனாவில்