close
Choose your channels

4 வருட திருமண வாழ்க்கை.. பரவசத்துடன் பதிவு செய்த சிம்பு, தனுஷ் நடிகை..!

Sunday, September 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழில் இரண்டே இரண்டு திரைப்படங்கள் நடித்த, அதில் ஒன்று சிம்பு படம் இன்னொன்று தனுஷ் படம் என நடித்த நடிகை தனது நான்காவது திருமண நாள் குறித்து பரவசத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ’மயக்கம் என்ன’ மற்றும் சிம்பு நடிப்பில் தரணி இயக்கத்தில் உருவான ’குஸ்தி’ ஆகிய 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்தவர் நடிகை ரிச்சா. இந்த இரண்டு படங்களுமே அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து நடிகை ரிச்சா, ஒரு சில தெலுங்கு படங்களில் மட்டும் நடித்த நிலையில் எம்பிஏ படிப்பதற்கு அமெரிக்கா சென்றார். அங்கு தான் படிக்கும் கல்லூரியில் சக மாணவரான ஜோ லங்கேலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார்.

இந்த நிலையில் நடிகை ரிச்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நான்காவது ஆண்டு திருமண நாளை ஒட்டி பரவசமான ஒரு பதிவு செய்துள்ளார். அதில் நாங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இணைந்தோம். நான் மிகவும் அற்புதமான மனிதனிடம் எனது காதலைச் சொன்னேன். நாங்கள் வெவ்வேறு உலகங்களை சேர்ந்தவர்கள், ஆனால் எங்களுக்கு தனித்துவமான பாதைகள், அன்பு மற்றும் பரஸ்பர மரியாதை இருந்தது. இருவரும் ஒரு அழகான பயணத்தை ஒன்றிணைந்து செய்து வருகிறோம்.

கடந்த நான்கு ஆண்டுகளில் உண்மையிலேயே சிறப்பான ஒன்றை நாங்கள் உருவாக்கி உள்ளோம். எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் உங்களுடன் வாழ்க்கையை செலவிட என்னை தேர்வு செய்ததற்கு நன்றி’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment