close
Choose your channels

தனுஷ், சிம்பு பட நடிகையின் திருமண அறிவிப்பு

Wednesday, January 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2010ஆம் ஆண்டு தெலுங்கில் ராணா நடிப்பில் வெளியான 'லீடர்' படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை ரிச்சா அதன் பின் தனுஷ் நடித்த 'மயக்கமென்ன', சிம்பு நடித்த 'ஒஸ்தி' உள்பட ஒருசில படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் ஒரே ஆண்டில் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ரிச்சா தனது காதல் மற்றும் திருமணம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். தனக்கு ஜோ என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை என்றும், கூடிய விரைவில் திருமண தேதியை அறிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஜோ அவர்களை பிசினஸ் ஸ்கூலில் சந்தித்ததாகவும், அவருடன் பழகிய இந்த இரண்டு வருடங்கள் அற்புதமானவை என்றும், அதனால் அடுத்த கட்டத்திற்கு தங்களுடைய வாழ்க்கையை தாங்கள் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ள நடிகை ரிச்சாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment