தனுஷ் தம்பி சூப்பர் லுக்: வாழ்த்து தெரிவித்த கமல்-ரஜினி பட நாயகி!
Send us your feedback to audioarticles@vaarta.com
கமலஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஒருவர் தனுஷின் ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் டிரைலரை பார்த்து விட்டு ’தனுஷ் தம்பி சூப்பர் லுக்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜகமே தந்திரம்’. இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வரும் 18-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை திரையரங்கில் பார்த்த அனுபவம் ஓடிடியில் பார்த்தால் இருக்காது என்று தனுஷ் தனது டுவிட்டரில் கூறியிருப்பது பெரும் பரபரபபி ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ’ஜகமே தந்திரம்’ டிரைலரை பார்த்து பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டுவிட்டரில் இணைந்த நடிகை ரேவதி, சற்று முன்னர் ’ஜகமே தந்திரம்’ படத்தின் டிரைலரை பார்த்து ’தனுஷ் தம்பி சூப்பர் லுக், அருமை’ என்றும் பதிவு செய்துள்ளார்.
கமல்ஹாசன் நடித்த தேவர் மகன், ரஜினிகாந்த் நடித்த ‘கை கொடுக்கும் கை’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் மிகச்சிறந்த நடிகை என தமிழ்த் திரையுலகில் பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#JagameThandhiramTrailer - Dhanush thambi looks superb.
— Actress Revathi (@ActressRevathi) June 1, 2021
அருமை! @dhanushkraja
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com