மதச்சார்பற்ற இந்தியாவில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது: ராமர் கோவில் குறித்து நடிகை ரேவதி..!

  • IndiaGlitz, [Thursday,January 25 2024]

மதச்சார்பற்ற இந்தியாவில் ஆன்மீக நம்பிக்கைகளை தனிப்பட்ட முறையில் வைத்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்ததாகவும் ஆனால் ராமர் கோவில் இந்த விஷயத்தை மாற்றி இருப்பதாகவும் நடிகை ரேவதி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் கடந்த 80கள், 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரேவதி. கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரபு, விஜயகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் தற்போது ராமர் கோவில் திறப்பு குறித்து தனது கருத்தை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது ஒரு மறக்க முடியாத விஷயம். ராமர் முகத்தை பார்த்ததும் என் உணர்வுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஒரு வித்தியாசமான விஷயம் என்னவெனில் இந்துக்களாக இருக்கும் நாம் நமக்குள்ளேயே நமது நம்பிக்கையை வைத்திருந்தோம். அதற்கு காரணம் நாம் அடுத்தவர்களை காயப்படுத்த கூடாது என்று நினைத்தோம்.

மதச்சார்பற்ற இந்தியாவில் ஆன்மீக நம்பிக்கைகளை தனிப்பட்ட முறையில் வைத்திருக்க வேண்டும் என்ற நமது நிலை தற்போது மாறி உள்ளது. ராமரின் வருகை இந்த விஷயத்தை மாற்றி உள்ளது. ராமரின் பக்தர்கள் தான் நாம் என இனி சத்தமாக சொல்லலாம். ஜெய்ஸ்ரீராம்’ என்று பதிவு செய்துள்ளார். ரேவதியின் இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.