திருமண தேதியே அறிவிக்கவில்லை.. அதற்குள் ப்ரீ-வெட்டிங் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை..!

  • IndiaGlitz, [Monday,October 21 2024]

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, பிரபல நடிகை சோபிதாவை திருமணம் செய்ய இருப்பதாகவும், சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இருவருக்கும் விரைவில் திருமணம் என்று கூறப்பட்டாலும், இன்னும் திருமண தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் சோபிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரீ-வெட்டிங் குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

‘Pasupu Danchadam’ என்ற நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டதாக கூறியுள்ள சோபிதா, இது குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதனை அடுத்து எப்போது திருமணம்? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இதனால் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த புகைப்படங்கள் பதிவு செய்து சில நிமிடங்களே ஆகியுள்ள நிலையில் நடிகை த்ரிஷா உள்பட 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய யூடியூபர் இர்ஃபான்: நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு..!

பிரபல யூடியூபர் இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டிய வீடியோவை வெளியிட்டிருந்த நிலையில், இந்த வீடியோ பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

சாச்சனாவுக்கு இனி சாப்பாடு பிரச்சனை இருக்காது.. ஜெப்ரிக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 2 வாரங்கள் முடிவடைந்து மூன்றாவது வாரம் வெற்றிகரமாக தொடங்கி உள்ள நிலையில், ஒவ்வொரு வாரமும் ஆண்கள் அணி பெண்கள் அணியில் இருந்து

'கஜினி 2' படத்தில் 2 ஹீரோக்கள், 2 கஜினிக்கள்? வேற லெவல் தகவல்..!

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா, அசின், நயன்தாரா நடித்த 'கஜினி' திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம் 2008 ஆம்

விஜய் அழைக்காவிட்டாலும் தவெக மாநாட்டிற்கு செல்வேன், ஏனெனில்... விஷால் பேட்டி..!

விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த மாநாட்டிற்கு பிரபல அரசியல் தலைவர்கள்

இந்திரஜா ரோபோ சங்கரின் 5 ஆம் மாதம் பூச்சூடல் விழா.. நெகிழ்ச்சி பதிவு.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமானார் என்ற தகவல் வெளியானது.