ரிஸ்க் எடுத்து படகில் உடற்பயிற்சி செய்யும் தமிழ் நடிகை: வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ’ராஜதந்திரம்’ ’சரவணன் இருக்க பயமேன்’ ’மிஸ்டர் சந்திரமௌலி’ உள்பட பல தமிழ் திரைப்படங்களிலும் தெலுங்கு ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ரெஜினா. இவர் தற்போது விஷாலின் ’சக்ரா’, ‘கசடதபற’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரெஜினா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் படகில் நின்று கொண்டு ரிஸ்கான உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் விரைவில் ’வைல்ட் வாரியர் ரேஸ்; போட்டிக்காக தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments