திருமண நாளில் கணவருடன் செம போஸ்.. நடிகை ரீமா சென் பகிர்ந்த புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ரீமாசென் இன்று தனது கணவருடன் திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் கணவருடன் இருக்கும் செம ரொமான்ஸ் போஸ் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த 2000களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரீமாசென் என்பது தெரிந்தது. கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’மின்னலே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர் அதன் பின்னர் விஜய்யின் ’பகவதி’ கார்த்தியின் ’ஆயிரத்தில் ஒருவன்’ சிம்புவின் ’வல்லவன் ’உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் நடிகை ரீமாசென் கடந்த 2012 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஷிவ் கரன்சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ருத்ரவீர் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் இன்று நடிகை ரீமாசென் தனது 11 வது திருமண நாளை கொண்டாடிவரும் நிலையில் கணவருடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருவதோடு ரசிகர்கள் திருமண நால் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout