விஜய், கார்த்தி நாயகி ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படம்
- IndiaGlitz, [Friday,September 03 2021]
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய முதல் திரைப்படமான ’மின்னலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரீமாசென். அதன் பின்னர் தளபதி விஜய்யின் ’பகவதி’ விஷாலின் ’செல்லமே’ மற்றும் ’திமிரு’ சிம்புவின் ’வல்லவன்’ கார்த்தியின் ’ஆயிரத்தில் ஒருவன்’, விக்ரமின் ‘தூள்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
நடிகை ரீமாசென் கடந்த 2012ஆம் ஆண்டு பிரபல தொழில் அதிபர் ஷிவ் கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் 2013ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஒரு மகன் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ரீமாசென், சமீபத்தில் தனது மகனின் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை ரீமாசென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சரியத்தில் கமெண்ட்ஸ்க்ளை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.