கிடுகிடுவென வளர்ந்துவிட்ட நடிகை ரீமாசென் மகன்: வைரல் புகைப்படம்!
- IndiaGlitz, [Tuesday,February 23 2021]
கௌதம் மேனன் இயக்கிய ’மின்னலே’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் விஜய் நடித்த ’பகவதி’ விக்ரம் நடித்த ’தூள்’ விஷால் நடித்த ’செல்லமே’ சிம்பு நடித்த ’வல்லவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ரீமாசென்.
இவர் 2012ஆம் ஆண்டு தொழிலதிபர் ஷிவ் கரன் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு 2013ஆம் ஆண்டு ருத்ரவீர் என்ற மகன் பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரீமாசென் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவ்வப்போது தனது கணவர் மற்றும் மகனின் புகைப்படங்களை பதிவு செய்து வருவார். இந்த நிலையில் சமீபத்தில் மகன் ருத்ரவீர் 8வது பிறந்த நாள் கொண்டாடியபோது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தில் அவருடைய மகன் கிடுகிடுவென வளர்ந்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். விஜய்யுடன் நடித்த நாயகிக்கு இவ்வளவு பெரிய மகனா? என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் மற்றும் லைக் செய்து வருகின்றனர்.