நடிகை ரீமாசென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படம்!
- IndiaGlitz, [Monday,November 29 2021]
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கிய ’மின்னலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரீமாசென் என்பதும் அதன் பின் அவர் விஜய் நடித்த ’பகவதி’ செல்வராகவன் இயக்கிய ’ஆயிரத்தில் ஒருவன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு தொழிலதிபர் ஷிவ் கரண் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரீமா சென்னுக்கு 2013ஆம் ஆண்டு ருத்ரவீரர் என்ற மகன் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது பிறந்த 40வது பிறந்தநாளை கொண்டாடிய ரீமாசென் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவருடைய மகனின் புகைப்படமும் இருக்கும் நிலையில் ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.