44 வயதில் பாட்டியான அர்ஜூன் பட நாயகி!
- IndiaGlitz, [Wednesday,September 18 2019]
பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் அர்ஜுன் நடித்த 'சாது' என்ற படத்தில் நாயகியாக நடித்தவருமான நடிகை ரவீனா டாண்டன் தற்போது பாட்டி ஆகி உள்ளார்
நடிகை ரவீனா டாண்டன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சாயா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் சாயாவிற்கு ஷான் மெண்டஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் அவர் கர்ப்பமானார். இந்த நிலையில் தனது வளர்ப்பு மகள் சாயாவிற்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதாக ரவீனா தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். அந்த குழந்தையை தாங்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் வீட்டிற்கு வரவேற்பதாகவும் ரவீனா டாண்டன் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவு செய்துள்ளார்
ஒரு புகைப்படத்தில் சாயா குழந்தையுடன் வீட்டிற்குள் நுழையும் போது பூஜை செய்யப்படுவது போலவும் இன்னொரு புகைப்படத்தில் ரவீனா டண்டன் தான் தான் பாட்டியானதை மகிழ்ச்சியுடன் தனது தோழிகள் முன் வெளிப்படுத்துவது போலவும் பதிவு செய்யப்பட்டுள்ளது
அர்ஜுன் நடித்த சாது திரைப்படத்தில் ரவினா டாண்டன் நாயகியாக நடித்திருந்தார் என்பதும் இந்த படத்தை பிரபல இயக்குனர் பி வாசு இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது