குடிபோதையில் ரகளை செய்ததாக வதந்தி.. ரூ.100 கேட்டு நோட்டீஸ் அனுப்பிய கமல் பட நடிகை..!

  • IndiaGlitz, [Saturday,June 15 2024]

கமல்ஹாசன் படத்தில் நடித்த நடிகை குடிபோதையில் நடுரோட்டில் ரகளை செய்ததாக பத்திரிகையாளர் என்று கூறிக்கொண்ட ஒருவர் தவறான தகவலை பரப்பிய நிலையில் அவரிடம் 100 கோடி இழப்பீடு கேட்டு நடிகையின் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கமல்ஹாசன் நடித்த ’ஆளவந்தான்’ உட்பட சில தமிழ் படங்களிலும் பல ஹிந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை ரவீனா டண்டன். இவர் சமீபத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது அவருடைய கார் விபத்தை ஏற்படுத்தியதாகவும் இதையடுத்து அவரிடம் அந்த பகுதி மக்கள் ரகளை செய்ததாகவும் கூறப்பட்டது.

உண்மையில் ரவீனா டண்டன் கார் எந்த விபத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் பணம் பறிக்கும் நோக்கத்துடன் சிலர் வேண்டுமென்றே ரகளையில் ஈடுபட்டது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்தது. இது குறித்து யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து பத்திரிகையாளர் என்று கூறிக் கொண்ட ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் ரவீனா டண்டன் குடிபோதையில் ரகளை செய்ததாக தவறான தகவலை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நடிகை ரவீனா டண்டன் அந்த நபருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் தன்னுடைய புகழுக்கு இழுக்கு நேரிடும் வகையில் வதந்தி பரப்பிய அந்த நபர் தனக்கு 100 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

More News

வெற்றி பெற்ற விஜய் சேதுபதியின் 50வது படம்.. மற்ற நடிகர்களின் 50வது படங்கள் என்ன தெரியுமா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படம் 'மகாராஜா' நேற்று வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில் தமிழ் திரை உலகில் பிரபல நடிகர்களின் 50வது படங்கள் என்னென்ன?

'தளபதி 69' குறித்து விஜய் எடுத்த அதிரடி முடிவு.. 'கோட்' படத்திற்கு ஜாக்பாட் அடித்ததா?

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 'கோட்'

ஒரே ஒரு சூப்பர் ஹிட் படம்.. நயனை மிஞ்சிய சம்பளம்.. ஏஆர் முருகதாஸ் நாயகிக்கு ஜாக்பாட்..!

தென்னிந்திய திரை உலகில் நயன்தாரா தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்று கூறப்பட்டு வரும் நிலையில் ஒரே ஒரு பாலிவுட் படத்தின் வெற்றி காரணமாக நடிகை ராஷ்மிகா மந்தனா

லண்டன் ஹீரோவுக்கு அக்காவான நயன்தாரா.. 150 நாட்கள் தாக்கு பிடிப்பாரா?

லண்டன் ஹீரோ கேரக்டரில் நடிக்கும் நடிகருக்கு அக்கா கேரக்டரில் நடிக்கும் நயன்தாரா காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

கமல் பாட்டையெல்லாம் யாரும் உட்கார்ந்து பார்க்க மாட்டாங்க.. இயக்குனர் சொன்னதை மறுத்த ஏவிஎம்..!

கமல் பாட்டையெல்லாம் யாரும் 4 நிமிடம் உட்கார்ந்து பார்க்க மாட்டார்கள், அதனால் தான் அந்த பாட்டை ஒரு நிமிடமாக குறைத்தேன் என்றும் இயக்குனர் கூறியதை