ராஷ்மிகா மந்தனாவுக்கு என்ன ஆச்சு? சிகிச்சை அளித்த டாக்டரின் இன்ஸ்டாகிராம் பதிவு!

தமிழ், தெலுங்கு, பாலிவுட் என பான் - இந்திய நடிகையாக உருவாகியுள்ள ராஷ்மிகா மந்தனாவுக்கு திடீரென முழங்கால் வலி ஏற்பட்ட நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தளபதி விஜய்யுடன் ’வாரிசு’ அமிதாப்பச்சனுடன் ’குட் பை’, அல்லு அர்ஜூனனுடன் ‘புஷ்பா 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மூட்டு வலி பிரச்சனையில் இருந்த ராஷ்மிகா மந்தனா விஜயவாடாவில் உள்ள மூட்டுவலி சிகிச்சை நிபுணர் டாக்டர் கவுரவ் ரெட்டி என்பவரை சந்தித்து சிகிச்சை பெற்று உள்ளார். இத்தகவலை டாக்டர் கவுரவ் ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ராஷ்மிகா நடனமாடும் போது அவர் தனது மொத்த எடையையும் முழங்காலில் வைத்து நடனமாடுவதால் அவருக்கு முழங்கால் வலி வருகிறது என்று அவரிடம் நான் விளையாட்டாக கூறினேன். மற்றபடி ‘புஷ்பா’ படத்தில் சாமி சாமி பாடலுக்கு அவர் நடனமாடியதை நான் மிகவும் ரசித்தேன். தற்போது ராஷ்மிகா மந்தனா மூட்டுவலி பிரச்சினை தீர்ந்து நலமாக உள்ளார். விரைவில் அவர் உங்களை மீண்டும் நடனமாடி மகிழ்விப்பார் என்று தெரிவித்து உள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.