இன்ஸ்டாவில் பார்டி பண்ணும் நடிகை ரஷ்மிகா மந்தனா… வைரலான ரீல் வீடியோ!
- IndiaGlitz, [Tuesday,December 14 2021]
தென்னிந்திய சினிமாவில் பிரபல இளம் நடிகையாக வலம்வருபவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. கடந்த 2016 இல் “கிரிக் பார்டி“ கன்னடத் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் இந்தி, தமிழ் சினிமாக்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றவராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் “புஷ்பா“ திரைப்படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் “புஷ்பா“ திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது. மேலும் ஸ்ரீ தேவி பிரசாத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே செம ஹிட் அடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நடிகை சமந்தா நடிப்பில் “ஓ சொல்றியா“ பாடல் ரிலீசாகி லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்தது. தற்போது “புஷ்பா“ படத்தின் 3 ஆவது சிங்கிள் பாடலாக “ஹே சாமி ஹே சாமி“ எனும் பாடல் வெளியாகி உள்ளது. நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்தப் பாடல் வெளியான சில நாட்களில் கிட்டத்தட்ட 250 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சமீபத்தில் நடைபெற்ற “புஷ்பா“ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மேடையில் நடிகை ரஷ்மிகா இந்தப் பாடலுக்கு சிறு நடன அசைவுகளை வெளிப்படுத்தியிருந்தார். இதுகுறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் தற்போது நடிகை ரஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது “ஹே சாமி ஹே சாமி“ பாடலுக்கு ரீல் செய்து வெளியிட்டு உள்ளார்.
அதில் பலரும் எனது பாடலுக்கு ரீல் வெளியிடுகிறீர்கள்.. நானும் இந்த பார்டியில் கலந்து கொள்கிறேன் என ரஷ்மிகா மந்தனா சொல்லியிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இந்த ரீல் வீடியோவிற்கு 18 லட்சத்தை தாண்டி லைக்ஸ்கள் குவிந்திருக்கின்றன.