முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளிய நேஷினல் கிரஷ்.....! எதில் தெரியுமா....?
Send us your feedback to audioarticles@vaarta.com
பல பிரபல முன்னணி, நடிகைகளையும் பின்னுக்கு தள்ளியுள்ளார் நேஷினல் கிரஷ்-ஆன ராஷ்மிகா மந்தானா.
இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தானா, பாலிவுட் படங்களில் தற்போது நடித்து வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் "புஷ்பா" என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம் படம் மூலமாக இந்திய அளவில் கவனம் ஈர்த்தவர் தான் ராஷ்மிகா. தன்னுடைய கியூட் எக்ஸ்பிரஷன்களாலும், நடிப்பாலும் "நேஷனல் க்ரஷ்"-ஆக வலம் வருகிறார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை ஒன்றை ராஷ்மிகா படைத்துள்ளார். அதாவது இவரை பின்தொடரும் ஃபாலோயர்ஸ்களின் எண்ணிக்கை, 19 மில்லியன் 20 ஆயிரத்தை தொட்டுள்ளது. இதுவரை தென்னிந்திய நடிகைகள் காஜல் அகர்வால் 19 மில்லியன், சமந்தா 17 மில்லியன் 50 ஆயிரம், ரகுல் ப்ரீத் சிங் 17 மில்லியன் 20 ஆயிரம், ஸ்ருதிஹாசன் 17 மில்லியன் ஃபாலோயர்ஸ்களையும் வைத்திருந்தனர். தற்போது காஜலை பின்னுக்கு தள்ளி ராஷ்மிகா முதலிடம் பிடித்துள்ளார். இதனால் அவர் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments