சூரியனோடு டைட்டானிக் போஸ்… ஆனால் சிங்கிள்? இளம் நடிகையின் வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Saturday,March 06 2021]

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை ராஷி கண்ணா. டெல்லியைச் சேர்ந்த இவர் இந்தி திரைப்படங்களில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த “இமைக்கா நொடிகள்“ படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து இருந்தார். அடுத்து நடிகர் ஜெயம் ரவியுடன் “அடங்கமறு“, நடிகர் விஷாலுடன் “அயோக்கியன்“, நடிகர் விஜய் சேதுபதியுடன் “சங்கத்தமிழன்“ போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் நடிகை ராஷி கண்ணா தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் நடிகை ராஷி கண்ணா, அந்திவேளை சூரியனோடு கையை நீட்டிக் கொண்டு கடற்கரையை ரசிக்கிறார். இந்த போஸ் ஹாலிவுட்டில் காதல் சின்னத்திற்கு அடையாளமாகக் கருதப்படும் டைட்டானிக் படத்தின் போஸ் போன்றே இருக்கிறது. ஆனால் நடிகை ராஷி கண்ணா பதிவிட்ட புகைப்படத்தில் அவர் தனியாகத்தான் இயற்கையை ரசித்துக் கொண்டு இருக்கிறார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More News

எப்பவும் எனக்கு அவர்தான் ஹீரோ… சச்சினே உருகும் அந்த லெஜண்ட் யார் தெரியுமா?

இந்தியக் கிரிக்கெட் அணியில் மறக்க முடியாத மற்றும் அசைக்க முடியாத லெஜண்டாக வலம் வந்தவர் சுனில் கவாஸ்கர்.

ஷாப்பிங் சென்ற இடத்தில் சோகமாக உட்கார்ந்திருக்கும் ப்ரியா: அட்லி காரணமா?

'ராஜா ராணி' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அட்லி அதன்பின் தளபதி விஜய் நடித்த 'தெறி' 'மெர்சல்' மற்றும் 'பிகில்' ஆகிய மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மங்களகரமான மஞ்சள் உடையில் பிக்பாஸ் ஷிவானி: புகைப்படம் வைரல்!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி கிட்டதட்ட 90 நாள் தாக்குப்பிடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சீக்ரெட்டாக நடந்த சீரியல் நடிகையின் திருமணம்; மாப்பிள்ளை யார் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் நடித்த நடிகை ஒருவருக்கு திடீரென திருமணம் நடந்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது. 

சிம்புவின் 'மாநாடு' ரிலீஸ் எப்போது? வெங்கட்பிரபு தகவல்!

சிம்பு நடித்துவரும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்