100 பேருக்கு இல்லையென்றாலும் ஒருவருக்காவது செய்யுங்கள்: பிரபல நடிகையின் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல லட்சக்கணக்கான குடும்பங்கள் வேலையின்றி வருமானமின்றி பசியும் பட்டினியுமாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் பிரபல நடிகை ராஷிகண்ணா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
இன்றைக்கு லட்சக்கணக்கான மக்கள் உயிர் வாழத் தேவைப்படும் உணவு இன்றி உள்ளனர். இந்த பெரும் தொற்றால் பசியின் கொடுமை அதிகரித்துவிட்டது. வாழ்வாதார பற்றாக்குறையால் வருமானம் குறைந்து போனதாலும் அடிப்படை தேவையான உணவுக்கு வழியில்லாமல் போய்விட்டது.
இந்தப் பெரும் தொற்றின் தொடரின் இரண்டாம் அலை பல ஏழைக் குடும்பங்களை பட்டினியில் தள்ளிவிட்டது. கொரோனா வைரஸ் காரணமாக அனைவருக்கும் பணப்பற்றாக்குறை. நான் தனிப்பட்ட முறையில் ரொட்டி வங்கியுடன் இணைந்து வேலை பார்த்து வருகிறேன். இந்த நேரத்தில் பசியால் தவிக்கும் மக்களுக்கு ரொட்டி வங்கியினர் இடைவிடாமல் சாப்பாடு கொடுத்து வருகிறார்கள். இப்பொழுது நீங்களும் உதவ வேண்டிய நேரம் இது. உங்களால் 100 பேருக்கு உணவளிக்க முடியாவிட்டாலும் ஒருவருக்காவது உணவளிக்கலாம்’ என்று கூறியுள்ளார். ராஷி கண்ணாவின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இரண்டாவது அலையின் போது, மேலும் மேலும் பல குடும்பங்கள் பசியுடன் போராடிக் கொண்டிருக்கின்றன. Mவெறும் ரூபாய் 40க்கு ரோட்டி வங்கி இன்னும் ஒரு பசித்த வயிற்றுக்கு உணவளிக்க உதவலாம்.ரோட்டி வங்கி செய்யும் அற்புதமான பணியை நான் ஆதரிக்கிறேன். pic.twitter.com/yftS9KNPdO
— Raashii Khanna (@RaashiiKhanna_) June 8, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments