நடிகை என்ற பந்தாவெல்லாம் எனக்கில்லை… வீடியோ வெளியிட்ட இளம் நடிகை!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வருபவர் நடிகை ராஷிகண்ணா. இவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான “இமைக்கா நொடிகள்“ திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.

மேலும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த துக்ளக் தர்பார் திரைப்படம் சமீபத்தில் வெளியாகியதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் சிம்புவுடன் இவர் நடித்த “மாநாடு“, “அரண்மனை 3” போன்ற திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராஷிகண்ணா தன்னுடைய அன்றாட வாழ்க்கையைப் பற்றிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் விளக்கேற்றி கடவுள் வழிபாட்டுடன் தனது நாளை துவங்கும் நடிகை ராஷிகண்ணா அடுத்து தேநீர், யோகா, சுட்டித்தனமான நடனம், நண்பர்களுடன் தொலைபேசியில் அரட்டை என்று ஒரு சாதாரண பெண்ணைப் போலவே வாழ்வதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வாழ்க்கைமுறை குழப்பமில்லாமல் தன்னுடைய இதயத்தை சீராக வைத்திருக்க உதவுவதாகவும் அதீத மகிழ்ச்சியைக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

தற்போது நடிகை ராஷி கண்ணா “சர்தார்“, “திருச்சிற்றம்பம்“, நடிகர் சித்தார்த்துடன் “சைத்தான் கா பச்சா” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சோஷியல் மீடியாவில் அவர் வெளியிட்ட Day of life வீடியோ ரசிகர்களிடையே பாசிட்டிவ் கமெண்டுகளை பெற்று வைரலாகி வருகிறது.