படப்பிடிப்பின்போது பாலியல் தொல்லை: நடிகர் சண்முகராஜன் மீது பிரபல நடிகை புகார்

  • IndiaGlitz, [Monday,October 15 2018]

கடந்த சில மாதங்களாக நடிகைகள் உள்பட திரையுலகினர் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தைரியமாக வெளியே கூறி வருகின்றனர். இதனால் பாலியல் தொல்லை கொடுப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இன்னும் ஒருசில இடங்களில் மட்டும் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை செங்குன்றத்தில் படபிடிப்பின் போது தொலைகாட்சி தொடரில் நடித்து வரும் பிரபல நடிகை ராணி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல தமிழ் நடிகர் சண்முகராஜன் மீது செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் செய்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நடிகை ராணி, ராமராஜன் நடித்த 'வில்லுப்பாட்டுக்காரன்' உள்பட பல படங்களில் நடித்தவர் என்பதும், நடிகர் சண்முகராஜன், 'கமல்ஹாசன் நடித்த 'விருமாண்டி' உள்பட பல படங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.