தலைகீழாக வேற லெவலில் யோகா செய்யும் ரம்யா பாண்டியன்.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ரம்யா பாண்டியன் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை மட்டும் இன்றி யோகா மற்றும் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அவர் தலைகீழாக யோகா செய்யும் வீடியோவை சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரை உலகின் நடிகை, குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார் என்பதும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள அவர் தனது பாலோயர்களை திருப்தி செய்ய அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட சிலையோடு சிலையாக ரம்யா பாண்டியன் இருக்கும் புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.
இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைகீழாக நிற்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கேப்ஷனாக அவர் கூறியிருப்பதாவது: தலைகீழாக யோகா செய்வதில் நீண்ட பயிற்சி தேவைப்படுகிறது. சிறிதளவு மாறுபாடு ஏற்பட்டாலும் வித்தியாசம் ஆகிவிடும். தலையை திருப்பும் போதும், தோள்பட்டை வலிமையை பொறுத்து சமநிலையானது கடினமாக இருந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவுக்கு ஏராளமான ரசிகர்கள் தங்கள் லைக்ஸ், கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout