திடீரென ஆன்மீக பயணம் மேற்கொண்ட ரம்யா பாண்டியன்.. யாருடன் கிரிவலம் சென்றார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,April 26 2023]

சமூக வலைதளங்களில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகை ரம்யா பாண்டியன் திடீரென தனது சகோதரிகளுடன் ஆன்மீக பயணம் சென்றுள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் நடிகைகளில் ஒருவரும் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் போட்டியாளருமான ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் பிரபலம் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த சில மாதங்களாக அவர் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் உட்பட பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் அவை மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை அவர் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்கள் எடுத்து பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் ரம்யா பாண்டியன் தனது சகோதரி கீர்த்தி பாண்டியன் மற்றும் சுந்தரியுடன் திருவண்ணாமலைக்கு சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். திருவண்ணாமலை சிவன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு அதன் பின் கிரிவலம் சென்றோம், முதல் முறையாக தனது சகோதரிகளுடன் கிரிவலம் சென்றது புதுமையான அனுபவமாக இருந்தது, மிகவும் அமைதியான, அழகான ஆன்மீக அனுபவம் கிடைத்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

More News

'கட்டா குஸ்தி 2' எப்போது? நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பதில்..!

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்த 'கட்டா குஸ்தி' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது

சிங்கப்பூரில் தமிழருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.. மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம்..!

கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

'அழகி' நடிகை நந்திதா தாஸை ஞாபகம் இருக்கிறதா? லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்..!

இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் பார்த்திபன் நடிப்பில் உருவான 'அழகி' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நந்திதா தாஸ் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

33வது பிறந்த நாளை கொண்டாடிய 'கில்லி' தங்கை நடிகை.. திருமணம் செய்யாததற்கு கூறிய காரணம்..!

தளபதி விஜய் நடித்த 'கில்லி' திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த நடிகை ஜெனிபர் தனது 33 வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில் அது குறித்த வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.

'கபாலி' படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தாணு திட்டம்.. முக்கிய காட்சிகள் மாற்றப்படுகிறதா? 

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான 'கபாலி' திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்றது.