பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது... ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

  • IndiaGlitz, [Monday,December 18 2023]

நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும், அவர் பதிவு செய்யும் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்கள் குவியும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாவாடை தாவணி காஸ்ட்யூமில் பதிவு செய்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

பிக்பாஸ் போட்டியாளர் அபிராமி வெங்கடாசலம் உட்பட ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ள நிலையில், பாவாடை தாவணி காஸ்ட்யூம் உங்களுக்கு மிக பொருத்தமாக இருக்கிறது போன்ற கமெண்ட்ஸ்களும் ஏராளமாக பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் ’இடும்பன்காரி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் மிக விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.