இதுதான் ரம்யா பாண்டியன் ஸ்டைல்.. செம்ம போட்டோஷூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Saturday,February 24 2024]

நடிகை ரம்யா பாண்டியன் ஸ்டைலான போட்டோஷூட் புகைப்படங்களை சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ’இதுதான் ரம்யா பாண்டியன் ஸ்டைல் ’என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்,

தமிழ் திரையுலகில் நடிகைகளின் ஒருவரான ரம்யா பாண்டியன், பிக் பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளுக்கு பின்னர் பிரபலமானார் என்பதும் ஒரு சில திரைப்படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் வைத்துள்ள ரம்யா பாண்டியன் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பது தெரிந்தது. சமீபத்தில் கூட அவர் ரிஷிகேஷ் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகியது.

இந்த நிலையில் ஸ்டைலிஷான காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரம்யா பாண்டியன் சற்றுமுன் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான லைக் குவிந்து வருகிறது. ’இதுதான் ரம்யா பாண்டியன் ஸ்டைல்’, ’என்ன சிம்ரன் இதெல்லாம்’ ,’வேற லெவலில் இருக்கிறது உங்கள் ஸ்டைல்’ என பல சுவாரஸ்யமான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.