டார்க் சாக்லேட் கெட்டப்பில் ரம்யா பாண்டியன்.. வேற லெவல் போட்டோஷூட்..!

  • IndiaGlitz, [Saturday,April 15 2023]

நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது புதுப்புது போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் டார்க் சாக்லேட் கெட்டப்பில் உள்ள போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் திரையுலகில் நடிகைகளின் ஒருவரான ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ், குக் வித் கோமாளி உள்பட ஒரு சில நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் வைத்துள்ள ரம்யா பாண்டியன் வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவை இணையதளங்களை கலக்கும் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் சற்றுமுன் ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டார்க் சாக்லேட் கெட்டப்பில் உள்ள போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது மேலும் இந்த பதிவில் அவர் ’எந்த இருளும் ஒளியின் தீப்பொறியை உள்ளே இருந்து மறைக்க முடியாது’ என்றும் கேப்ஷனாக ஆக பதிவு செய்துள்ளார்.