மீண்டும் கிளாமருக்கு மாறிய ரம்யா பாண்டியன்.. வேற லெவல் போட்டோஷூட்..!

  • IndiaGlitz, [Sunday,August 06 2023]

நடிகை ரம்யா பாண்டியன் கடந்த சில நாட்களாக கோவில் கோபுரம் அருகே சேலை கட்டிய புகைப்பட போட்டோஷூட் மற்றும் மாடர்ன் உடைகளில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் தற்போது மீண்டும் கிளாமருக்கு மாறி உள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் சுமார் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது அவர் கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து வந்தார். மேலும் அவர் அபாரமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களை பதிவு செய்து வருவதும் உண்டு.

இந்த நிலையில் மீண்டும் அவர் கருப்பு காஸ்டியூமில் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவுக்கு கமெண்ட்கள் குவிந்து வருகிறது. ’பட வாய்ப்புகள் குறைந்தவுடன் உடை அளவு குறையும்’ என்றும் ’இன்னும் கொஞ்ச நாள்தான் தமிழ்நாட்டின் மியா காலிபாவாக மாறிவிடுவார்’ என்றும் ரசிகர்கள் தங்கள் பாணியில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த பதிவிற்கு ஒரு சில மணி நேரங்களில் ஒரு லட்சத்துக்கு அதிகமான லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.