கருப்பு காஸ்ட்யூமில் செம கிளாமர்.. ரம்யா பாண்டியனின் கலக்கல் போட்டோஷூட்!

  • IndiaGlitz, [Friday,September 16 2022]

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவை மில்லியன்கணக்கான லைக்ஸ்களை பெற்று இணையதளங்களில் வைரலாகும் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் சற்றுமுன் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களில் அவர் கருப்பு கிளாமர் காஸ்ட்யூமில் கலக்கலாக உள்ளார்.

இந்த போட்டோ ஷூட் புகைபடங்களுக்கு நடிகை கீர்த்தி பாண்டியன் Fire fire fire!!! என்று கமெண்ட் செய்துள்ளார். அதேபோல் நடிகை வாணி போஜனும் Fire எமோஜியை பதிவு செய்துள்ளார். விஜய் டிவி பிரியங்கா ‘வாவ்’ என்று கமெண்ட் செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி ரம்யா பாண்டியனின் சகோதரர் உள்பட ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த புகைப்படத்திற்கு லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களில் இது போன்று கலக்கல் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை ரம்யா பாண்டியன் வெளியிடவில்லை என்றும் இதுதான் உச்சபட்ச கிளாமர் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.