சமூக வலைத்தளங்களில் இருந்து திடீரென விலகிய 'மாஸ்டர்' நடிகை!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அனேகமாக இந்த படம் தீபாவளி அன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவர் சமூக வலைத்தளத்தில் இருந்து திடீரென விலகியதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தளபதியின் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை ரம்யா சுப்பிரமணியம். தொலைக்காட்சியில் பிரபலமாகி அதன் பின்னர் மணிரத்னத்தின் ’ஓகே கண்மணி’ உள்ளிட்ட படங்களில் நடித்த இவருக்கு ‘மாஸ்டர்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இயக்குனர் லோகேஷ் வாய்ப்பு கொடுத்திருந்தார். இவரது கேரக்டர் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அனைத்து சமூக வலைதளங்களிலும் பிரபலமாகி வந்த ரம்யா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென சமூக வலைத்தளத்தில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக கூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது: இந்த ஊரடங்கின் கடைசி வாரத்தை மெதுவாக எடுத்துக்கொள்ளப் போகிறேன். உயிரோடு இருப்பதற்காக என் இதயமும் மனமும் பாராட்டை விரும்புகின்றன. இருக்கும் அனைத்துக்காகவும் நன்றி செலுத்தி ஒவ்வொரு தருணத்தையும் முழுமையாக வாழுங்கள். கவலை வேண்டாம். நான் முற்றிலும் நன்றாக இருக்கிறேன். ஒரு குட்டி இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன் என் அன்பு மக்களே. அதுவரை உங்கள் உடல்நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

நடிகை ரம்யா திடீரென சமூகவலைதளத்தில் இருந்து விலகிடதற்கான காரணம் தெரியாமல் அவரது ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

More News

மணி ஹெய்ஸ்ட் தமிழ் நடிகர்கள் வீடியோ இதோ:

ஓடிடி பிளாட்பாரத்தில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் மணி ஹெய்ஸ்ட்' சீரியல் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த சீரியலில் நடித்து வரும் ஒவ்வொரு நட்சத்திரத்தையும்

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு: 17 ஆயிரத்தை தாண்டியதால் பரபரப்பு 

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக 700க்கும் அதிகமாகவும், சென்னையில் 500க்கும் அதிகமாகவும் இருந்த நிலையில்

தமிழக-கேரள எல்லையில் நடந்த திருமணம்: திருமணத்திற்கு பின் அவரவர் வீடு சென்ற மணமக்கள்!

தமிழக-கேரள எல்லையில் ஒரு திருமணம் நடந்ததாகவும் அந்த திருமணம் முடிந்த பின்னர் மணமகன் மற்றும் மணமகள் ஆகியோர் அவரவர் வீட்டிற்கு சென்றதாகவும் வெளிவந்துள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

நித்தியானந்தா மாதிரி ஒரு மனிதர், ஒரு நாட்டையே உருவாக்கி இருக்கிறார் தெரியுமா??? மொலோசியா குடியரசு பிறந்த கதை!!!

பண்டைய கிரேக்க வரலாற்றில் மொலோசியா என்ற நகரம் மிகவும் பிரபலமானது

கொரோனா வைரஸ் ஆடைகளில் தங்குமா??? ஷுக்களில்??? தலைமுடியில்??? மருத்துவர்களின் விளக்கம்!!!

கொரோனா வைரஸ் பரவல் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் அமெரிக்கா நோய்க் கட்டுப்பாட்டு மையம் பொருட்களின் மீது கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருக்கிறது