பத்ம விருது பெற்ற பழம்பெரும் நடிகையுடன் லஞ்ச் சாப்பிட்ட ரம்யா கிருஷ்ணன்!

சமீபத்தில் பத்ம விருது பெற்ற பழம்பெரும் நடிகையுடன் லஞ்ச் சாப்பிட்ட அனுபவத்தை நடிகை ரம்யா கிருஷ்ணா தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவாக வெளியிட்டுள்ள நிலையில் அவை தற்போது வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் உள்பட பல தென்னிந்திய மொழிகளிலும், சிவாஜிகணேசன் எம்ஜிஆர் உள்பட பல பிரபலங்கள் நடித்த படங்களிலும் நடித்தவர் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி. 90 வயதாகும் இவருக்கு சமீபத்தில் பத்ம விருது அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியை நடிகை ரம்யா கிருஷ்ணன் சந்தித்து அவருடன் லஞ்ச் சாப்பிட்ட வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் எனக்கு தற்போது 90 வயது ஆகிறது நான் நூறு வயது வரை வாழ வேண்டும் என்று சிலர் எனக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்று சவுகார்ஜானகி கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.